2024 மக்களவைத் தேர்தல் – வெற்றி யாருக்கு?பரபரப்பு சர்வே

Advertisements

இந்தியாவில் வரும் 2024-ல் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. ம், பிரதமர்
மோடி 2-வது முறையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் தற்போது
பிரதமர் மோடிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது.. பாஜக அரசின் சாதனை உள்ளிட்டவை
குறித்து பிரபல ஆங்கில ஊடகமான இந்திய டுடே சி வோட்டர்ஸ் உடன் இணைந்து

Advertisements

கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நாடு முழுக்க இருக்கும் மக்களிடம் பல்வேறு
கேள்விகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
மக்களவையில் ஒரு கட்சி பெரும்பான்மையை அடைய 272 இடங்களில்
வென்றிருக்க வேண்டும் அந்த வகையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் பாஜக 284
இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.அதாவது தகுதிப்
பெரும்பான்மையை விடவும் கூடுதலாக 12 இடங்களில் பாஜக வெல்ல
வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலில்
பாஜக 303 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
இதேபோல காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 191 இடங்களில் வெல்லும்
என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52
இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
இதில் மோடி அரசின் சாதனைகள் குறித்தும் கேட்கப்பட்டு இருந்தது. அதிகரிக்கும்
பணவீக்கம், கொரோனா பெருந்தொற்று, சீனாவின் அச்சுறுத்தல்கள் ஆகியவை கடந்த
3 ஆண்டுகளாகப் பெரிய தலைவலியாக இருந்த போதும், நரேந்திர மோடி
தலைமையிலான அரசு மீது மக்கள் பெரியளவில் அதிருப்தியில் இல்லை என்று
அதில் கூறப்பட்டுள்ளது. சுமார் 20 சதவீத மக்கள் கொரோனாவை வெற்றிகரமாகச்
சமாளித்ததே பாஜக அரசின் மிகப் பெரிய சாதனை என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதேபோல அரசின் மிகப் பெரிய தோல்வியாக எதைக் கருதுவீர்கள் என்ற
கேள்விக்கு 25 சதவீதம் பேர் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறியதே பாஜக
அரசின் மிகப் பெரிய தோல்வி என்று குறிப்பிட்டுள்ளனர். சுமார் 17 சதம் பேர்
அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்சினை என்று சொல்லியுள்ளனர்.
மேலும், 8 சதம் பேர் அரசு கொரோனா பெருந்தொற்றை சரியாகக் கையாளவில்லை
என்றும் அதுவே அரசின் பெரிய தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *