கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பெயர்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, வரும்
வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிரது கூடவே குரு பெயர்ச்சி
ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. குரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு
இடம்பெயர உள்ளார். அந்தவகையில், கோடீஸ்வர யோகம் யாருக்கு கிடைக்கும் என
இங்கே பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
ஏனெனில், குரு ஒருவரின் ராசிக்குள் நுழைகிறார் என்றால், அவர் உங்கள்
துணையாக வர உள்ளார் என்று அர்த்தம். நீங்கள் குரு பகவான் பெயர்ச்சி செய்ய
உள்ள ராசிக்காரராக இருப்பதால், உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.
நல்ல திருமண வரன், வேலைவாய்ப்பு, செல்வ செழிப்பு ஆகியவற்றை பெறுவீர்கள்.
நிதி நிலை மேம்படும், இடமாற்றம் அல்லது சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும்.
மிதுனம் :
குருவின் பார்வையானது மிதுனத்திற்கு கிடைக்காவிட்டாலும், தனகாரகனான குரு 11
ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு நிதிநிலையில் சிறப்பான
முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் நிதி சம்மந்தமாக நீங்கள் எடுக்கும்
எல்லா செயலும் வெற்றி பெறுவதுடன், நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில்
ஒற்றுமை அதிகரிக்கும். முதலீடு செய்திருந்தால் அதன் மூலம் நல்ல லாபத்தையும்
பெறுவீர்கள்.
சிம்மம் :
இயல்பாகவே வெற்றிக்கு சொந்தக்காரர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இந்த தமிழ்
புத்தாண்டு இவர்களுக்கு மேலும் அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளது. வரும் 22 ஆம்
தேதி குரு சிம்ம ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.9
ஆம் இடத்தில் குரு அமர்வது மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. அதனால்,
நீங்கள் செய்த நல் வினைகளுக்கு ஏற்ற நல்ல பலன்களை பெறுவீர்கள். அதனால்,
நீங்கள் எடுக்கும் எந்த ஒரு சிறிய முயற்சிக்கும் பெரிய வெற்றி கிடைக்கும்.
துலாம் :
துலாம் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் குரு பகவான் அடுத்த ஒரு
வருட காலத்திற்கு சஞ்சரிக்க உள்ளார். குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசி மீது
விழுவதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.நீங்கள் எடுக்கும் எல்லா
முயற்சியிலும் முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக வாழ்க்கைத் துணை, தொழில்
கூட்டாளி, பங்காளி வகையில் ஒற்றுமை, என பல அனுகூலமும்
உண்டாகும்.கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம்
உண்டாகும். வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். சுருக்கமாகக்
கூறினால், அடுத்த ஒரு வருடத்திற்கு உங்க காட்டில் அதிர்ஷ்ட மழை தான்.
தனுசு:
குரு பகவான் தரக்கூடிய கோடீஸ்வர யோகத்தை பெற உள்ள மற்றொரு ராசி தனுசு.
குரு உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர உள்ளார்.
இதனால், குருவின் 9 ஆம் பார்வை ராசி மீது விழுவதுடன், ராசிக்கு 5-ல் குரு
அமர்ந்திருப்பது கூடுதல் விசேஷம்.குரு இருக்கும் இடத்திலிருந்து 9 ஆம் இடத்தில்
இருக்கும் கிரகமாக இருந்தாலும் சரி, ராசியாக இருந்தாலும் சரி அது பல விதத்தில்
நற்பலன்களை பெரும். அந்த வகையில் உங்கள் ராசிக்கு இந்த குரு பயற்சி நல்ல
யோக பலன்களை கொடுக்கும்.
இது தவிர மற்ற ராசிகளுக்குறிய பலாபலன்களையும் இங்கு பார்க்கலாம்.
விரைய குரு – ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களே, விரைய குரு காலம், சுப செலவுகள் அதிகரிக்கும். நிலம்,
சொத்து வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்கள் வாங்கலாம்.
கூட்டுத் தொழில் செய்ய இது ஏற்ற காலமில்லை. அரசு வேலைக்கு முயற்சி
செய்யலாம். போட்டித்தேர்வில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண
விசயங்களில் கவனம் தேவைப்படும் காலமாகும்.
கர்ம ஸ்தான குரு – கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் குருபகவான் பயணம்
செய்கிறார். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். பத்தில் குரு
வரப்போவதால் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் கவனமும்
நிதானமும் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் வம்பு வைத்துக்கொண்டால்
வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது
நல்லது.
அஷ்டம குரு – கன்னி
கன்னி ராசிக்காரர்களே..அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் குரு எந்த விசயத்திலும்
கவனம் தேவை. வெளியூர் வெளிநாட்டு பயணங்களைத் தரப்போகிறார் குருபகவான்.
திருமணமாகி நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை
தருவார். பணம் விசயங்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும்.
ருண ரோக சத்ரு குரு – விருச்சிகம்
உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு
பயணம் செய்யப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் நிதானமும் கவனமும்
தேவை. குரு பயணிக்கும் இடம் கடன் வம்பு வழக்கு இடம் என்பதால் வங்கிக் கடன்
வாங்கி இடம் வீடு நிலம் வாங்கலாம். ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது
அவசியம். அலுவலகத்தில் உயரதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும். கவனமாகவும்
நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது.
சுக ஸ்தான குரு – மகரம்
மகர ராசிக்காரர்களே ஏழரை சனியால் பல ஆண்டு காலமாக கஷ்டங்களை மட்டுமே
சந்தித்து வரும் உங்களுக்கு குரு பகவானால் இனி வரும் காலங்கள் பாதிப்பை
குறைத்து சந்தோஷத்தை அதிகரிக்கும். வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கஷ்டங்கள் குறைந்து கவலைகள் நீங்கப்
போகிறது இந்த குரு பெயர்ச்சி உங்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பத்தை
ஏற்படுத்தப்போகிறது.
தைரிய குரு – கும்பம்
கும்ப ராசிக்காரர்களே..குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம்
வீட்டிற்குப் போகிறார். ஏழரை சனி இருப்பதால் எந்த பிரச்சினை என்றாலும்
கவலைப்பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவை. குரு மூன்றில்
மறைவதால் முயற்சிகளை கை விட வேண்டாம். காலம் கடந்தாலும் வெற்றி
கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
குடும்ப குரு – மீனம்
மீன ராசிக்காரர்களே ஜென்ம குரு இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு
செல்கிறார். இனி தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திடீர் பண வருமானம்
வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சுபிட்சமான கால கட்டமாகும்.
குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம்
அதிகரிக்கும். சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும்.