2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில் 1,558குற்றவாளிகள் கைது.!

Advertisements

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 4,943 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்..
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு, 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது என்றும்,கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும் ஏழு இரண்டு சக்கரவாகனங்களும் கைப்பற்றப்பட்டது என்றார்.இதனைதொடர்ந்து, இதுவரையிலும் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர் என தெரிவித்த அவர்,கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *