12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதா நிறுத்திவைப்பு!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

Advertisements

12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisements

 தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த 21-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மசோதாவுக்கு பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து  குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட  நிலையில்,  அ.தி.மு.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ட, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.  இதைத்தொடர்ந்து 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினரின் கருத்துகளை அறியவும் தமிழக அரசு சார்பில் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் படி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டமசோதா  என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *