10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றப்படும்…. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்…

Advertisements

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisements

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் காலக்கெடு 6 மாதங்களுக்கு நீட்டித்தது தொடர்பாக, சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டித்தால், மே மாதம் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோய்விடும் என கூறினார். இந்த தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து கூறுகையில்,  10.5  சதவீத  இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், 10.5 சதவீத  இட ஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *