ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியுள்ளது. கீழச்சித்திரை வீதியில் இருந்த புறப்பட்ட தேர், தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதி ஆகிய நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து நிலையை சென்றடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி, திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை திருமஞ்சனம் கண்டருளும் நிகழ்ச்சியும், இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் ஆளும் பல்லக்குடன் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.