
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிவராசன் மற்றும் வெடிகுண்டு பெண்மணி தாணுபற்றிய புதிய சர்ச்சைகள் வெகு விரைவில் வெளிவர காத்திருக்கின்றன.தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற அந்த படுகொலை சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலும் ஒரு முன்னணி பிரதமராக மக்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டவர் ராஜீவ் காந்தி
பிரச்சாரத்திற்காக அவர் சென்னை வந்த போது ஸ்ரீபெரும்புதூரில் வைத்து பொதுக்கூட்ட மேடையில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் .தமிழகம் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே இந்த நிகழ்வால் மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தது. அதுமட்டுமல்ல தமிழகத்திற்கு மிகப்பெரிய கறையையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியது
இந்த சம்பவத்திற்கு பின்னால் ஏராளமான மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றில் இன்னும் பல நிகழ்வுகள் வெளியே தெரியாமலேயே புதைந்து போய் விட்டன .இந்த நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஸ்கெட்ச் போட்டு நடத்திய சிவராசன் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தானு என்ற பெண்மணி உள்பட பல முக்கிய ரகசியங்கள் குறித்து இணையதள தொடர் ஒன்று வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது
ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவரும் இந்த சீரியலை சோனி லைவ் வெப் சீரிஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது .இந்த வெப் சீரியலின் ட்ரெய்லரே நம்மை அதிர வைப்பதாக இருக்கிறது . ஒரு தொலைபேசியில் குற்றவாளி ஒருவர் “ராஜீவ் காந்தி இன்னும் உயிரோடு இருக்கிறாரா?” என்று கேட்பது போல் ஓப்பனிங் காட்சி அமைந்திருக்கிறது
ஸ்ரீபெரும்புதூரில் நடந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா என்பவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் .ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்வில் 90 நாட்கள் நடந்த அதிரடி வேட்டையின் கதை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன .இந்த புத்தகத்தின் அடிப்படையிலும் நிஜமான சம்பவங்களை கோர்வையாக்கியும் இந்த வெப் சீரியல் எடுக்கப்பட்டுள்ளது .உலக அளவில் வெளிவர இருக்கும் இந்த வெப் சீரியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் அபிஷேக் சங்கர் என்பவர் கைரேகை அதிகாரியாக நடித்துள்ளார்
இது ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்படாமல் சிவராசனை இந்திய அதிகாரிகள் எப்படி சுற்றி வளைத்தார்கள் ராஜிவ் படுகொலைக்கு பிறகு 90 நாட்கள் என்னென்ன சம்பவங்கள் நடந்தன .பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் முதல் சுப்பிரமணியசாமி வரை ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எச்சரித்தது வரை வரை பல புதிய நிகழ்வுகள் இந்த வெப் சீரியலில் வெளிவர காத்திருக்கின்றன
சிவராசன் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டும் சொந்தமானவன் இல்லை அவனுக்கு உலக நாடுகள் பலவற்றிலும் தொடர்பு இருந்தன என்பதையும் வெளி காட்டப் போகிறது இந்த வெப் திரைப்படம் .ராஜிவ் படுகொலை நிகழ்வில் மனித வெடிகுண்டாக தாணு செயல்பட்டதை காவல்துறை அதிகாரி சந்திரசேகரன் எப்படி கண்டுபிடித்தார் என்பது பற்றிய ரகசியங்களும் இந்த திரைப்படத்தில் இடம்பெறுகிறது
இந்த ட்ரெய்லர் வெளியான 10 நாட்களில் கிட்டத்தட்ட நான்கு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள் .வெகு விரைவிலேயே வெளிவரவிருக்கும் இந்த வெப் சீரியலால் மீண்டும் புதிய சர்ச்சைகள் ஏற்பட காத்திருக்கின்றன என்கிறது ஜெம் தொலைக்காட்சியின் இந்த சிறப்புச் செய்தி
