டெல்லியில், ராகுல் காந்தியையும், கார்கேவையும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசி, வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்க முடிவு எடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு தயாராகி வருகின்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக நிதிஷ்குமார் நேற்று முன்தினம் தலைநகர் டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர் கார்கேவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டுவதற்காக வாய்ப்புகள் பற்றி விரிவாக பேசப்பட்டது. மேலும் பா.ஜ.க,.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கவும் உறுதி எடுத்துக்கொண்டனர். கூட்டாக இந்த சந்திப்பை தொடர்ந்து தலைவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, அனைத்து கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரக்கூடிய தேர்தல்களை கூட்டாக சந்திக்கவும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், முயற்சி எடுத்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் மற்றும் பிற தலைவர்களின் முயற்சியை ராகுல் காந்தி பாராட்டினார்.