
சென்னை உலகம் முழுவதும் இன்று உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கல்லீரல் வடிவ மணல் சிற்பம் உருவாக்கப்பட்டு உள்ளது. பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் என்பவர், 80 டன் மணலை கொண்டு இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த மணல் சிற்பத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, ‘ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமாக வாழுங்கள்’ என்னும் புத்தகத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், அப்போலோ மருத்துவமனை துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சுனீத்தா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
