ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், ஜப்பான் நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும் வடகொரியா தனது ஏவுகணையை அனுப்பியது.
இந்நிலையில், தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியை அண்மையில் நடத்தியது.
இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அணு ஆயுத சோதனை உள்ளிட்டவற்றை முடுக்கியது.
இதனைதொடர்ந்து, ஜப்பான் மற்றும் வடகொரியா நாடுகளிடையே உள்ள கடற்பகுதியில் நேற்று அதிகாலை மீண்டும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது.
இதற்கு தென்கொரியா அதிபரின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதில் `வடகொரியாவின் கடல் நடவடிக்கைகளை ஜப்பான் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அனுப்பியது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த போவதாகவும்’ ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்