மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமானவரிதுறை சோதனை. கரூரில் மீண்டும்பரபரப்பு !

Advertisements

அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் சோதனை நீடித்தது. இந்த நிலையில் 3-வது முறையாக தற்போது வருமான வரித்துறையினர் கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisements

இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உடனடியாக உறுதிபடுத்த இயலவில்லை. இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 8 நாட்கள் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் அவரது வீட்டை குறிவைத்து வருமானவரிதுறை சோதனை தொடங்கியுள்ளது கரூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *