புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு பணியாற்று வந்தார். தற்போது அவருக்கு பதிலாக மெர்சி ரம்யா என்பவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மெர்சி ரம்யா மாவட்ட ஆட்சியராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, பொது மக்களின் குறைகளை கேட்டு நடைமுறைப்படுத்தவும், வளர்ச்சி பணிகள் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முறையாக செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.