பிரதமர் மோடிக்கு வந்த கொலை மிரட்டல் எதிரொலியால் கேரளாவில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகிறார். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவுக்கு அவர் சாலையில் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார். பின்னர் பா.ஜ.க. இளைஞர் பாசறை சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்தும் பேசுகிறார். இதற்கிடையில் பிரதமர் மோடி பயணத்தின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தது. மேலும் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய 49 பக்கமும் சமூகவலைதளத்தில் கசிந்ததால் கேரளாவில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி கொச்சியில் 2 ஆயிரம் போலீசாரும், திருவனந்தபுரத்தில் 3 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சிகள் நடைபெறும் திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையம், சென்டிரல் ஸ்டேடியம் ஆகிய பகுதிகள் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு வந்த கொலை மிரட்டல் எதிரொலி- கேரளாவில் 5,000 போலீசார் குவிப்பு!
Advertisements