ஜி ஸ்கொயர் நிறுவனம் மீதான பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சி அமைப்பதற்க்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்கள் நிறுவனம் தொழில் செய்து வருவதாகவும், ஜி ஸ்கொயர் மற்றும் அதன் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்கள் தவறான மதிப்புகளோடு சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்
Advertisements