தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்படும் பிரமான பத்திரத்தில் இருந்த விவரங்களை திருடிதான், சொத்து பட்டியல் என அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சனாதான எதிர்ப்பு பொதுக்கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்திலிருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றார். சுற்றுச்சூழலை பாதுகாக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும் என்ற அவர், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவக் கொலைகளை கண்டிக்க ஆணவப் படுகொலைகள் தடுப்பு சட்டம் தேவைப்படுகிறது என்றார்… தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்கின்ற பிரமாண பத்திரத்தில் இருந்த விவரத்தை திருடிதான் அண்ணாமலை சொத்து பட்டியல் என வெளியிட்டுள்ளதாகவும், அண்ணாமலை ஓரு நகைச்சுவை மன்னன் எனவும் விமர்சித்தார்.
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்படும் பிரமான பத்திரத்தில் இருந்த விவரங்களை திருடிதான், சொத்து பட்டியல் என அண்ணாமலை வெளியிட்டுள்ளார்
Advertisements