சென்னையில் கடந்த 14 ம் தேதி நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தி.மு.க.,வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, ‛தி.மு.க., மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இழப்பீட்டு தொகையாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.இதை, 48 மணி நேரத்துக்குள் செய்யாவிட்டால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும். என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்…. இதற்கு , அண்ணாமலை வழக்கறிஞர் அனுப்பியுள்ள பதிலில் ; திமுக கேட்டபடி இழப்பீடாக ரூ.500 கோடி தர முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது.தி.மு.க., மீதான குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது.அண்ணாமலையின் குரலை ஒடுக்கும் வகையில் நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
தி.மு.க.,வினர் சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில், மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது -அண்ணாமலை…
Advertisements