![](https://gemlive.tv/wp-content/uploads/2024/03/banner.jpg)
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். மேலும் கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.