
திமுகவின் 2 ஆண்டு ஆட்சி இந்தியாவையே ஈர்த்துள்ளது என்றும், தமிழ்நாடு அமைதி புங்காவாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
சட்டசபையில், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலளித்து பேசினார். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாடு அரசு நன்மை செய்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும் என கூறினார். மகளிர்க்கு இலவசம் பயணம், பல்வேறு மாவட்டங்களில் ஒரு கோடிப் பேருக்கு பல்வேறு உதவிகள், வருவாய் பற்றாக்குறையை போக்கியது போன்ற பல திட்டங்களை செய்துள்ளதாக தெரிவித்தார்.. தமிழ்நாடு அரசின் ஆட்சி இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது என்னுடைய பெருமை மட்டுமல்ல, இந்த அமைச்சரவையின் பெருமை என தெரிவித்தார். மேலும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் கூறினார்..
