திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கிலோமீட்டர்   தூர ரெயில் மின்பாதை  திறப்பு!  காணொலிக்காட்சி மூலம்   பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

Advertisements

திண்டுக்கல்-பாலக்காடு இடையே 179 கி.மீ. தூர ரெயில் மின்பாதையை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார்.

Advertisements

திண்டுக்கல்-பாலக்காடு மின்பாதை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை-பாலக்காடு அதிவிரைவு ரெயில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் பல்வேறு சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாதையில் டீசல் என்ஜின் ரெயில்களே இயக்கப்பட்டு வந்த நிலையில், திண்டுக்கல்-பாலக்காடு இடையேயான 179 கி.மீ. தூர ரெயில் பாதையை, மின்பாதையாக மாற்றும் பணி நடைபெற்றது. மேலும் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு என 3 கட்டங்களாக மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. அதில் திண்டுக்கல்-பழனி, பழனி-பொள்ளாச்சி இடையே மின்மயமாக்கல் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்ட நிலையில்,  பிரதமர்  திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம்  ரெயில் மின்பாதையை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *