தமிழ்நாட்டில் ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இரண்டு பேர் பலி….தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்..

Advertisements

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனை உள்ளிட்ட பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு கூடுதலாக உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஒரேநாளில் 6 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக மொத்த பாதிப்பு 36 லட்சத்து 4 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது. 492 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. தற்போது, கொரோனா பாதித்து 3 ஆயிரத்து 660 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 108 பேருக்கும், கோயம்புத்தூரில் 54 பேருக்கும், கன்னியாகுமரியில் 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *