சென்னை விமான நிலையத்திற்கு, பல்லவ மன்னர் மாமல்லன் பெயர்  சூட்ட வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ்

Advertisements

சென்னை விமான நிலையத்திற்கு, பல்லவ மன்னர் மாமல்லன் பெயர்  சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப் பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல்,  ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு, தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்றும், அதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *