சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து

Advertisements

சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரர் தெரு மற்றும் நல்லமுத்து நகர் தெரு பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. இந்த 4 மாடி கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில், திடீரென கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்டோசர் நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பாதுகாப்பு நலன் கருதி கட்டட விபத்து நடந்த இடத்தைச் சுற்றி இருக்கும் பொது மக்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *