ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்து துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்தநிலையில், தாகுதல் நடக்கும் இடத்தில் இருந்து சூடானியர்கள் வெளியேறி செல்கின்றனர். இதையடுத்து இந்தியர்கள் உள்ளிட்டோர் எங்கு செல்வது என தெரியாமல் திணறி வருவதாகவும், மத்திய அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சூடானில் ராணுவம், துணை ராணுவம் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருவதால் பதற்றமான சூழல்நிலை நிலவி வருகிறது.
சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் இருந்த போதிலும் கர்தூம் நகரை விட்டுவெளியேற முடியாமல் இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக தகவல்
Advertisements