பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில், 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஜின்{ஹவா நகரில் உள்ள தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. தீயானது மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவிய நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
சீனாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு
Advertisements