சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கு – போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 32 வருடம் சிறை தண்டனை

Advertisements

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 32 வருடம் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

Advertisements

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம்  பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துமிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை நேற்று விசாரித்த  திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம், குற்றவாளி முருகேசனுக்கு 32 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

One thought on “சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கு – போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 32 வருடம் சிறை தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *