சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை….

Advertisements

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதாவை, 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

Advertisements

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, ஆளுநரின் ஒப்பிதலுக்காக அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிராகரித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதையடுத்து, இந்த மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா குறித்து கடந்த மாதம், ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு பதில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் விளக்கம் கேட்டுள்ளார். இந்த தகவலை சட்டப்பேரவையில் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை, சித்த மருத்துவ பல்கலைகழக மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டுள்ள நிலையில், அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *