குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் சாகுந்தலம் என்கிற சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹாவும் இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். மணிசர்மா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட திரைப்படமாக இதனை 3டியில் வெளியிட்டுள்ளனர்.
சாகுந்தலம் திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தெலுங்கில் உருவான சாகுந்தலம் திரைப்படத்தை தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர் படம் பார்த்த ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “சாகுந்தலம் படத்தின் விஷுவல் பிரம்மிக்க வைக்கிறது. வி.எஃப்.எக்ஸ் படத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. ஆடைகளும் கவரும் வண்ணம் அமைந்துள்ளன. 3டி அனுபவம் தனித்துவமாகவும் அற்புதமாகவும் இருந்ததாக பதிவிட்டுள்ள அவர், சமந்தா சகுந்தலையாக மிகவும் அழகாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், கொஞ்சம் கூட போர் அடிக்காத திரைப்படமாக சாகுந்தலம் உள்ளது. அற்புதமான படம். சமந்தாவின் கெரியரில் இது தான் சிறந்த படம். விஷுவல் ட்ரீட்டாக இப்படம் அமைந்துள்ளது. நடிகர் தேவ் மோகன் அழகாக இருக்கிறார்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு டுவிட்டில், சமந்தா மனம்நிறைந்த அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு தேவ் மோகனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பர். அழகியல் நன்றாக இருந்தாலும், வி.எஃப்.எக்ஸ் ஒகே ரகம் தான். படத்தின் பட்ஜெட் காரணமாக இப்படி இருக்கலாம். மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை, வாவ் மொமண்ட்ஸ் எதுவும் இல்லை. அறிமுக காட்சி, இடைவேளை மற்றும் கோர்ட் சீன் ஆகியவை மட்டும் தான் நன்றாக உள்ளன. நேர்த்தியான முயற்சி என பதிவிட்டுள்ளார். இதேபோல் சில நெகடிவ் விமர்சனங்களும் இப்படத்திற்கு வருகிறது. அதில் “மோசமான VFX மற்றும் சலிப்பூட்டும் திரைக்கதை கொண்ட ஒரு மோசமான புராண நாடகம் இது. கண்ணியமான இசை மற்றும் சில காட்சிகளைத் தவிர இந்தப் படத்தில் பேசுவதற்கு உண்மையான பாசிட்டிவ் எதுவும் இல்லை. போர்க் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளது. கார்ட்டூனிஷ் காட்சிகளுடன் கதை மெதுவாகவும் சலிப்பாகவும் இருக்கிறது. டிசாஸ்டர்!” என பதிவிட்டுள்ளார். மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது சாகுந்தலம் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு வசூலை வாரிக்குவிக்கிறது என்பதை பொறுத்து தான் இதன் ரிசல்ட் தெரியவரும்.