ஆளுநர் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, அப்போது விலகிவிடுவேன் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ளார். அங்கே மண்டபத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாணவர்கள் மனதை ஒருமுகபடுத்த யோகாசனம் செய்யுங்கள் என தெரிவித்த அவர், தான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது வேலையில் இருந்து விலகிவிடுவேன் என கூறினார். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சிபிஐ, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.