கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் மாரடைப்பு ஆபத்து அதிகரித்துள்ளதாக, பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக, தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறி இருப்பதாவது, சமீபத்திய உலகளாவிய அறிவியல் ஆராய்ச்சிகள், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், இதய நோய்கள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக கூறுகின்றனர். கொரோனாவால் ரத்தம் உறைகிற போக்கு அதிகரித்து, மாரடைப்பு ஆபத்தை கூட்டுகிறது. இதனால், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் உண்ணாவிரத கொழுப்பு சோதனையை மேற்கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் மற்றும் டிரெட்மில் சோதனை உள்பட வருடாந்திர இதய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதிக மன அழுத்தம், நீரிழிவு, அதிக அளவில் கொழுப்பு இருந்தால் அவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு, இதய நோயால் ஏற்படுகின்ற மரணம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு, சுகாதாரத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டாக்டர் நரேஷ் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.