கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். இதில் கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையுடன் வருகை தந்த பிரதமர் மோடிக்கு, பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் – காசர்கோடு இடையே இந்த வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் கேரள கவர்னர் மற்றும் முதல் மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ……..
Advertisements