கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குபதிவு சரியாக 7மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மேலும் மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மியில் 209 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்களான முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதல்வர் ஜெகதிஷ் ஷட்டர் , நடிகர் பிரகாஷ் ராஜ் , காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக் குமார் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில் காலை 11 மணி நேர நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.