கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். அதையடுத்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போட்டியில் இருந்து விலக விரும்புகிறவர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் தங்களின் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் போட்டி வேட்பாளர்களின் மனுவை வாபஸ் பெற வைக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனை அடுத்து இன்று அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
Advertisements