கர்நாடக மாநிலம், புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம், புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில், அதிமுக போட்டியிடுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவரான அன்பரசனை வேட்பாளராக தேர்வு செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுக தலைவர் அன்பரசன் போட்டியிடுகிறார் என அறிக்கை வெளியிட்டுள்ளது.