ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல்

Advertisements

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில்,  மத்திய அரசு செய்த  மனுத்தாக்கலில்   மாநிலங்களையும் ஒரு தரப்பாக சேர்த்து அவற்றின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஒரே பாலின ஜோடிகளான ஐதராபாத்தின் சுப்ரியோ சக்கரவர்த்தி- அபய் தங், டெல்லியின் பார்த் பெரோஸ் மெஹரோத்ரா- உதய்ராஜ் ஆனந்த் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  தனித்தனியாக வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.  அவர்கள் தங்கள் திருமணத்துக்கு 1954-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறப்பு திருமணச்சட்டத்தின்படி சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.   மத்திய அரசு புதிய மனு விசாரணையின் தொடக்கத்தில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.அந்த மனுவில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் எனவும்,    அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்கு வழக்குதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  முகுல் ரோத்தகி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்  “இந்த விவகாரம் அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் வருவதால், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அவற்றின் கருத்தைப் பெற நோட்டீஸ் அனுப்பத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *