ஐபிஎல் T20 : குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்ன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன. இந்நிலையில், இன்றைய 7வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே பலப்பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.