16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றது.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கிய நிலையில், 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. போட்டியின் இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.