ஐபிஎல் – ஐதராபாத் அணிக்கு எதிரான  லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் வெற்றி!

Advertisements

ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீசியது. முதலில் ஆடிய ஐதராபாத் அணி வீரர்கள் நிதான ஆட்டத்தை ஆடி 13.5 ஓவரில் 95 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பின்னடைவை சந்தித்தது. ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டும், ஆகாஷ், தீக்‌ஷனா, பதிரணா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். எளிய இலக்கை  நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனிடையே விக்கெட் கீப்பர் தோணி நேற்று கேட்ச் ஒன்றை பிடித்த நிலையில், அதிக கேட்ச் பிடித்த விக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *