எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க வேண்டும் என திருப்போரூரில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் எடப்பாடியை பொதுச்செயலாளராக அறிவித்ததை முன்னிட்டும், ரமலான் பண்டிகை முன்னிட்டும், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கோவளம் தர்காவில், அதிமுக பொதுச்செயலாளர் அடுத்து எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனை அடுத்து திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தையூர் குமரவேல் தலைமையில், கேளம்பாக்கம் ஜோதி நகர் மற்றும் கோவளம் பகுதியில் இஸ்லாமிய ஏழை எளிய மக்களுக்கு சேலைகள், லுங்கி, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.