
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது எனவும், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் புகழேந்தி மனு ஒன்றை அளித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக சட்ட விதிகள் திருத்தம் தொடர்பாக 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று கூறிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்
