
உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் 112 என்ற உதவி எண்ணின் வாட்ஸ் அப் குழுவிற்கு , மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
