உங்களுக்கு “பித்ரு தோஷம்” இருக்கிறதா? ஒரு சின்ன ‘டெஸ்ட்’: விடை கிடைத்து விடும்

Advertisements

உங்களுக்கு நிறைய பிரச்சனைகளா?ஏராளமான பணக்கஷ்டமா? குடும்பத்தில் குழப்பமா? பேசுவதெல்லாம் கெட்டதாக முடிகிறதா? முயற்சிகள் தோல்விகளைத் தழுவுகிறதா?வேலை-தொழிலில் நஷ்டமா? உடல் நிலை மோசமாகி வருகிறதா?எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? ஏதாவது செய்வினை வைத்திருப்பார்களோ? இப்படியெல்லாம் நினைக்கிறீர்களா?
ஒரு வேளை இந்த பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் பித்ருக்கள் தோஷமாக இருக்கலாம். பித்ருக்கள் தோஷம் என்பது இறந்து போன உங்கள் பெற்றோர் தாத்தா, பாட்டி போன்றோர்களுடைய கோபமாகும். ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஆத்மாக்களை அமைதிப்படுத்தாவிட்டால், அடுத்தடுத்த பாவங்களுக்கு சந்ததியினர் ஆளாக நேரிடும். இறந்தவர்களின் கர்மவினைப் பயன்கள், அடுத்தடுத்த சந்ததிக்கும் தொடரும் என்றும் விவரிக்கின்றன ஞானநூல்கள்அவர்களுக்குறிய திதி முறைகளை நீங்கள் சரியாகச் செய்யவில்லையென்றால் இப்படி அவர்கள் கோபப்படுவார்கள். அப்படி பித்ரு தோசம் இருந்தால் நீங்கள் எந்தக் கோவிலுக்கு போனாலும், எத்தனை விரதங்கள் இருந்தாலும் ஒன்றும் வேலைக்காவாது.

Advertisements


உங்களுக்கு பித்ரு தோசம் இருக்கிறதா? இருந்தால் அதனை எப்படி கண்டு பிடிப்பது? இதற்குத் தீர்வுதான் என்ன? என்கிறீர்களா.. இந்து மத சாஸ்திரத்தில் இதற்கு மிக எளிமையான வழிகள் இருக்கின்றன.. காகத்திற்கு ஒரு சின்ன பரீட்சை வைத்தால் போதும். உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறதா? என்பது தெரிந்து விடும். ஆமாம்.. உங்கள் வீட்டு வாசலில் காகத்திற்கு இட்லி, சாதம் போன்ற ஏதாவது உணவு வகைகளை வைத்து காகத்தை அழையுங்கள். சற்று நேரம் பொறுத்திருங்கள்.. காகங்கள் ஏதாவது வந்து சாப்பிடுகிறதா என்று பாருங்கள். எந்தக் காக்கையும் வரவில்லையா? நிச்சயம் உங்களுக்கு பித்ரு தோசம் இருக்கிறது என்று அர்த்தம்.
காகத்தை சாதாரணமாகக் கருதாதீர்கள். மனித வாழ்க்கைக்கும் அதற்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இறந்து போன நமது முன்னோர்கள்தான் காகங்களாக உலகை வலம் வருகின்றனர் என்கிறது இந்துமத சாஸ்திரம். காக்கை சனி பகவானின் வாகனம் ஆகும். காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். இதே போல் எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.
இதனையடுத்து பித்ரு தோசம் நீங்குவதற்குறிய திதி வேலைகளை உடனடியாக மேற் கொள்ளுங்கள். சிலருக்கு முன்னோர்களின் இறந்த தேதி தெரியாமல் இருக்கும். அதனால் திதி கொடுக்காமலே இருப்பார்கள். பரவாயில்லை. புரட்டாசி, தை, ஆடி அமாவாசை ஆகிய இந்த மூன்று அமாவாசை நாட்களில் பித்ருக்களை நினைத்து வழிபட்டு, திதியைக் கொடுக்கலாம்.மறக்காமல் ஒரு முறை உங்கள் குல தெய்வ கோவிலுக்கும் போய் வாருங்கள்.


இதுவல்லாமல் காக்கைக்கு உணவிட்டால் அதன் மூலமும் பித்ரு தோசம் நீங்கும் என்கிறது இந்து மத சாஸ்திரம். உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் தரும் சக்தி கொண்டது காக்கை இனம். இதன் மூலம் விபத்துக்கள் வீண்பழி போன்றவை உங்களை நெருங்காது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் நீங்கும்.பிரச்னைகள் யாவும் தீர்ந்து நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *