இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் – இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ

Advertisements

இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருவதாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

Advertisements

 இலங்கை நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ‘இலங்கைக்கு வாருங்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை தென்னிந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தலைமையில் வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கையில் இருந்து வந்து பங்கேற்ற 50-க் கும் மேற்பட்ட முகவர்கள், அங்குள்ள சுற்றுலா திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.      இந்தநிலையில் இந்திய பயணிகளை சுற்றுலாவுக்கு ஊக்குவிக்கும் விதமாக 20 டாலருக்கு விசா வழங்கப்படுகிறது என்று சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  மேலும் மே மாதத்தில் இருந்து பயணிகளுக்கான சொகுசு கப்பல், புதுச்சேரியில் இருந்து தலைமன்னாருக்கு மாதத்துக்கு 4 முறை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் இலங்கை அணி முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜெயசூர்யா, இலங்கை சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு பணியக தலைவர் சலகா கஜபாகு, இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜெயசூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *