Advertisements
இந்தோனேசியால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து இரண்டு மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.