இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 பேருக்கு பாதிப்பு உறுதி

Advertisements

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,158 பதிவான நிலையில், இன்று 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49,622 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,31,064 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,42,16,583 ஆக பதிவாகியுள்ளது.

Advertisements

நாடு முழுவதும் இதுவரை 220,66,25,120 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 467 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டு வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *