இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660 ஆக குறைவு….

Advertisements

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660 ஆக குறைந்துள்ளது.

Advertisements

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்து 112 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட  நிலையில், காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 7 ஆயிரத்து 178 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத்தொடங்கி வரும் நிலையில், இன்று பாதிப்பு 6,660 ஆக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 6,660 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 9,213 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *