இந்தியாவிலேயே முதன்முறையாக நீர்ப்பாசனம் தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது .மத்திய நீர்வள அமைச்சகம் சார்பில் இந்த ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில் இந்தியாவிலேயே அதிக ஏரிகள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
ஒட்டு மொத்த இந்தியாவிலும் 24 லட்சம் நீர்நிலைகள் இருக்கின்றன .இதில்1.6 சதவீதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தகவலும் தெரியவந்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் 13 ஆயிரத்து 629 ஏரிகள் இருக்கின்றன இது தவிர 43 ஆயிரத்து 847 குளம் குட்டைகள் உள்ளன
தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன .இது 8% ஆகும் .
குளம் குட்டைகளை பொருத்தமட்டில் ஆந்திரா ,ஒடிசா இமாசல பிரதேசத்திற்கு அடுத்ததாக தமிழ்நாடு நாலாவது இடத்தை பிடித்திருக்கிறது.
மொத்தமாக இந்தியா முழுவதும் 50,197 நீர்நிலைகள் எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது