ஆன்லைன் விளையாட்டு குறித்த புதிய விதிமுறைகள் வெளியீடு!

Advertisements

ஆன்லைன் விளையாட்டு குறித்த புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Advertisements

 தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதாவை  நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த அந்த மசோதா மீது சில விளக்கங்களைக் கேட்டு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.  இந்த  சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக சட்டசபையில்  நிறைவேற்றி மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக  அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,  மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள்-2023 என்று அழைக்கப்படும் எனவும்,   21-ந் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை பதிவு செய்தல், இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ஒரு லட்சம் கொடுத்து, பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும் நடவடிக்கையையோ அதை கொடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் மேற்கொள்ள வேண்டும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *