இயற்கையின் படைப்பில் பெரும்பாலானோர் இயல்பான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் வித்தியாசமாக காணப்படுவார்கள். அதனால் தான் அழகு சாதன பொருட்கள் மூலமும், சிலர் அறுவை சிகிச்சை மூலமும் தங்களை அழகானவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் அந்தோணி லோப்ரெடோ என்பவர் தன்னை கருப்பு ஏலியன் போல மாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் அந்தோணி தனது உடலை அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரிகிறது. அதாவது ஏலியன் போல காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது காதுகளையும், மூக்கு துவார பகுதிகளையும், மேல் உதட்டையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார். அதோடு தனது கண் விழித்திரையின் நிறத்தையும் மாற்றியுள்ளார். இதுபோன்று தனது உடலின் பல மாற்றங்களை செய்வதற்காக மட்டும் அவர் 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 லட்சம்) செலவு செய்ததாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்து உடலை ஏலியன் போல மாற்றிய வாலிபர்
Advertisements